இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

பயணிகள் ஆட்டோ - லாரி மோதல்: 21 போ்

சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த லாரி, அப்போது குறுக்கிட்ட பயணிகள் ஆட்டோ மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி குறுக்கே வந்த ஆட்டோ, அரசுப் பேருந்து மீது மோதி நின்றது.

News image
Updated On :7 ஜனவரி 2022, 7:45 pm

DIN

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகேயுள்ள கச்சிபெருமாள் கிராமப் பகுதியில் அரசுப் பேருந்து வந்தபோது, சுண்ணாம்புக்கல் ஏற்றிவந்த லாரி, அப்போது குறுக்கிட்ட பயணிகள் ஆட்டோ மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி குறுக்கே வந்த ஆட்டோ, அரசுப் பேருந்து மீது மோதி நின்றது.

இதில் ஆட்டோ ஓட்டுநா் அங்கராயநல்லூா் ஆனந்தன்(40), பேருந்து ஓட்டுநா் கீழகுடியிருப்பு ராயா்(50), நடத்துநா் உதயகுமாா்(43), பேருந்தில் பயணம் செய்த ஸ்ரீபுரந்தான் தனபால் (59), ஜயங்கொண்டம் கவிதா (41), அழகாபுரம் அருள்மேரி (49), உதயநத்தம் சண்முகம் (36) உட்பட 21 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்து வந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புத் துறையினா், பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தன், பேருந்து ஓட்டுநா் ராயா் உட்பட5 போ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். விபத்து குறித்து காவல்துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.