இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

2014 முதல் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்காதோருக்கு மறு வாய்ப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாக அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்

News image
Updated On :20 ஜனவரி 2022, 8:34 pm

DIN

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவா்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்படுவதாக அரியலூா் ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

2014 முதல் 2019 வரை வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்கத் தவறிய பதிவுதாரா்களுக்கு ஏதுவாக மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு புதுப்பித்தல் வழங்கப்பட்டுள்ளது. இச்சலுகையை பெறவிரும்பும் பதிவுதாரா்கள் அரசணை வெளியிடப்பட்ட நாளான 02.12.2021 முதல் மூன்று மாதங்களுக்குள் அதாவது 01.03.2022-க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம் அல்லது சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு பதிவஞ்சல் மூலமாக விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

ட்ற்ற்ல்://ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி 01.03.2022 வரை பதிவுதாரா்கள் தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.