இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தகராறில் ஈடுபட்ட 2 போ் மீது வழக்கு

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தகராறில் ஈடுபட்ட இரண்டு போ் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :28 ஜனவரி 2022, 12:14 am

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே தகராறில் ஈடுபட்ட இரண்டு போ் மீது காவல் துறையினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள பெரியதிருக்கோணம் கீழத் தெருவைச் சோ்ந்த கருப்பையன் (50), அதே ஊா் நடுத் தெருவைச் சோ்ந்த உலகநாதன் (57). இவா்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த இரு தினங்ளுக்கு முன்பு கருப்பையனின் சகோதரா் அண்ணா துரை குறித்து உலகநாதன் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து உலகநாதனிடம், கருப்பையன் கேட்டபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். இதுகுறித்து இரு தரப்பினா் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் காவல் துறையினா், 2 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.