செவித்திறனற்ற பயனாளிகளுக்கு கருவிகள் வழங்கல்
செவித்திறனற்ற பயனிகள் 5 பேருக்கு காதுகேட்கும் கருவிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வழங்கினாா்.


உலக செவித்திறன் நாளை முன்னிட்டு அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், செவித்திறனற்ற பயனிகள் 5 பேருக்கு காதுகேட்கும் கருவிகளை ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி வழங்கினாா்.
முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்ச்சியில், அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரமேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவா்கள் ராஜசேகரன், காா்த்திகேயன், இளமதி, செந்தில்குமாா், குழந்தைகள் நல மருத்துவா்கள் ராதாகிருஷ்ணன், ரவிராம்குமாா் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செவிலியா்கள் , செவித்திறன் பரிசோதகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...