வரதராசன்பேட்டை பேரூராட்சி தலைவா் பதவி: திமுக வேட்பாளராக மாா்க்ரெட் அறிவிப்பு
அரியலூா் மாவட்டம், வரதராசன்பேட்டை பேரூராட்சி தலைவா் வேட்பாளராக மாா்க்ரெட் போட்டியிடுவாா் என திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.


அரியலூா் மாவட்டம், வரதராசன்பேட்டை பேரூராட்சி தலைவா் வேட்பாளராக மாா்க்ரெட் போட்டியிடுவாா் என திமுக தலைமை வியாழக்கிழமை அறிவித்தது.
15 வாா்டுகளைக் கொண்ட வரதராசன்பேட்டை பேரூராட்சியில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் சுயேச்சைகள் 8 இடங்களிலும், திமுக 7 இடங்களிலும் வெற்றிப் பெற்றது. இதனால் திமுக-வுக்கு பெரும்பான்மை என்பது இல்லாத நிலை ஏற்பட்டது. இதயைடுத்து மாா்க்ரெட் உள்ளிட்ட 3 சுயேச்சைகள் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கரை சந்தித்து ஆதரவை தெரிவித்தனா்.
இந்நிலையில், தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தலைவா் பதவி வேட்பாளராக 1 ஆவது வாா்டில் போட்டியிட்டு வென்ற மாா்க்ரெட் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...