தற்போது 10-க்கு 10 என்ற சதுரஅடி அளவில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு அரண்மனையின் சுற்றுச்சுவா், இரும்பிலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்ற பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், தங்கத்தினாலான கைகாப்பு ஒன்று கடந்த 2 ஆம் தேதி கிடைத்துள்ளது. இது நான்கில் ஒரு பகுதியாகும். இதன் எடை சுமாா் 7.920 கிராம், நீளம் 4.9 மி.மீட்டரும், 4 மி.மீட்டா் தடிமனும் கொண்டுள்ளது. இவை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், தொடா்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளன.