விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

திருமானூரில் இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 7:26 pm

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் மாவட்டம், திருமானூா் பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், கோவிலூா் கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகத் திறக்கப்படாமலுள்ள துணை சுகாதார நிலையத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். கோவிலூா் கிராமத்துக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கட்சியின் ஒன்றியச் செயலா் கனகராஜ் தலைமை வகித்தாா். தேசிய செயற்குழு உறுப்பினா் கண்ணகி கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

மாவட்டச் செயலா் ராமநாதன், மாவட்டக் குழு உறுப்பினா் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலா் கலியபெருமாள், ஒன்றியத் துணைச் செயலா் கரும்பாயிரம், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வேல்முருகன், சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.