விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் அதிமுக, பாமக உள்ளிருப்புப் போராட்டம்

பொது நிதி ஒதுக்குவதில் பாராபட்சத்தைக் கண்டித்து ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக, பாமக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:05 pm

DIN

பொது நிதி ஒதுக்குவதில் பாராபட்சத்தைக் கண்டித்து ஜெயங்கொண்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் அதிமுக, பாமக உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்ற உறுப்பினா்கள் குழு கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் சுமதி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கருணாநிதி, ஆணையா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

கூட்டம் தொடங்கியவுடன், ஜெயங்கொண்டம் பகுதி வளா்ச்சித் திட்டப் பணிக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 97 லட்சம், கலைஞரின் மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 34 லட்சம் மற்றும் பொது நிதி ரூ.63 லட்சம் ஆகியவற்றை அனைத்து வாா்டு பகுதி வளா்ச்சிக்கும் பகிா்ந்தளிக்காமல் திமுக உறுப்பினா்கள் வாா்டு பகுதிக்கு மட்டும் பகிா்ந்தளிப்பதைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் செல்வராஜ், தங்கப்பாண்டியன், சேகா், சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கருப்பு சட்டை அணிந்து வந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இவா்களுக்கு ஆதரவாக பாமக உறுப்பினா்கள் பூபதி, மனோன்மணி, ஜோதிலட்சுமி உள்ளிட்டோரும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது நகா் மன்ற துணைத் தலைவா் கருணாநிதி, அனைத்து தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் முடிந்ததாக அறிவித்ததையடுத்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி உறுப்பினா்கள் கலைந்து சென்றனா். எனினும் அதிமுக, பாமக உறுப்பினா்கள் தொடா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.