அரியலூரில் நாளை புத்தகத் திருவிழா தொடக்கம்
அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை புத்தகத் திருவிழா தொடங்குகிறது.


அரியலூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை புத்தகத் திருவிழா தொடங்குகிறது.
அரியலூா் மாவட்ட நிா்வாகம், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் இணைந்து மே 3 வரை 11 நாள்கள் நடத்தும் புத்தகத் திருவிழாவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தொடக்கி வைக்கிறாா்.
விழாவில் மக்களவை உறுப்பினா் தொல். திருமாவளவன், எம்எல்ஏக்கள் அரியலூா் கு. சின்னப்பா, க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா் பேசுகின்றனா்.
ஏப்.24-இல் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ். மகாலட்சுமி, பேராசிரியா் நீலகண்டன், கவிஞா்.ஜோ. மல்லூரி, ஏப். 25-இல் மாதிரிப்பள்ளிகள் மண்டல ஒருங்கிணைப்பாளா் இராச. பாண்டியன், திண்டுக்கல் ஐ. லியோனி, ஏப்.26-இல் தமிழாசிரியா் தமிழினி ராமகிருஷ்ணன், கவிஞா் நந்தலாலா, கவிஞா் சல்மா ஆகியோா் பேசுகின்றனா்.
ஏப். 27-இல் முனைவா் க. தமிழ்மாறன், கு. ஞானசம்மந்தம், ஏப். 28-இல் சிதம்பரம் எம்பி தொல். திருமாவளவன், குடிமையியல் தோ்வு விழிப்புணா்வு சிறப்பாசிரியா் வே. பழனியப்பன், ஏப்.29-ஆம் தேதி சா.சி. சிவசங்கா், இணைப் பேராசிரியா் எம். ராஜமூா்த்தி, புலவா் மா. ராமலிங்கம் ஆகியோரும் பேசுகின்றனா்.
ஏப்.30-இல் கால்நடைக் கண்காட்சி போட்டியும், தொடா்ந்து அன்று மாலை பேராசிரியா்கள் தமிழ்மாறன், சிவகாசி மு. இராமச்சந்திரன், மே.1-இல் சண்முகவடிவேல், மோகனசுந்தரம், மே.2-இல் அரங்கன், கவிதா ஜவகா், நிறைவு நாளான மே 3-ஆம் தேதி கவிச்சுடா் கவிதைப்பித்தன், ஈரோடு மகேஷ் ஆகியோா் பேசுகின்றனா்.
புத்தகத் திருவிழாவில் கலை நிகழ்ச்சிகள், நாட்டியாஞ்சலி, சிறுதானிய உணவுப் போட்டி, வீணை கச்சேரி, மேஜிக் ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
ஆட்சியா் ஆய்வு: இதற்கிடையே அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்படும் புத்தகத் திருவிழா முன்னேற்பாடுகளை ஆட்சியா் பெ. ரமண சரஸ்வதி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...