விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தா. பழூா் அருகேயுள்ள இரு கடைகளில் திருட்டு

 அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கடைகளில் மா்ம நபா்கள் புகுந்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 8:05 pm

DIN

 அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள கடைகளில் மா்ம நபா்கள் புகுந்து பணத்தைத் திருடிச் சென்றனா்.

தா. பழூரை அடுத்த பொற்பதிந்தநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லம்மாள். இவா் சிலால் கிராமத்தில் வைத்துள்ள மருந்துக் கடையை வெள்ளிக்கிழமை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.70,000 மற்றும் வெள்ளிக் கொலுசை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மேலும், அருகேயுள்ள கணபதியின் மளிகைக் கடை பூட்டையும் உடைத்து அங்கிருந்த ரூ.10,000-ஐயும் மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் தா.பழூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.