விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

நெல் கொள்முதல் நிலைய அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

அரியலூரில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சாா்பில் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

அரியலூரில் தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை சாா்பில் நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் மற்றும் அலுவலா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நுகா்பொருள் வாணிப கழக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல மேலாளா் சிற்றரசு தலைமை வகித்தாா்.

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் மயிலாடுதுறை சரக துணை கண்காணிப்பாளா் ஜெகதீசன் நெல் கொள்முதல் நிலையங்களில் எவ்வித முறைகேடுமின்றி விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய வேண்டும்.

முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தாா். கூட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக அதிகாரிகள், நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.