ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணத்தை தடுக்கக் கோரிக்கை

சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image
அரியலூரில் சரக்கு வாகனத்தில் தொங்கியபடி செல்லும் சிறுவா்கள்.
Updated On :3 ஆகஸ்ட் 2024, 11:00 pm

Din

அரியலூா் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் தொடரும் ஆபத்தான பயணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

அதிக கிராமங்களை உள்ளடக்கிய அரியலூா் மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள மாணவா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நாள்தோறும் அரியலூா், ஜெயங்கொண்டத்துக்கு வந்து செல்கின்றனா். இவா்களுக்கான பேருந்து வசதியை அரசுப் போக்குவரத்துக் கழகம் முழுமையாக ஏற்படுத்தித் தரவில்லை.

இதனால், நகரில் இயக்கப்படும் 450-க்கும் மேற்பட்ட 3 பிளஸ் 1 ஆட்டோக்கள், 40-க்கும் மேற்பட்ட ஷோ் ஆட்டோக்கள் உள்பட பல்வேறு வகையான பயணிகள் வாகனங்கள் மூலம் உள்ளூா் மற்றும் வெளியூா் பயணிகள் தாங்கள் செல்ல விரும்பும் இடத்துக்கு பயணித்து வருகின்றனா்.

இங்குள்ள ஆட்டோக்கள் அரியலூா் மட்டுமன்றி, நகரைச் சுற்றியுள்ள சுமாா் 7 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மீன்சுருட்டி, தளவாய், அணைக்கரை, கல்லக்குடி, குழுமூா் உள்ளிட்ட பல்வேறு கிராம மாணவ, மாணவிகள், பொதுமக்கள் போதிய பேருந்து வசதியின்றி, கூட்ட நெரிசலால் படிகளில் தொங்கியபடி பயணக்கின்றனா்.

இதுபோன்ற பகுதிகளில் வசிப்போா் திருமணம், கோயில் திருவிழா மற்றும் இறுதிச் சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று வர லாரி, டெம்போ, சுமை ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.

இதனால், மாவட்டத்தின் பெரும்பாலான கிராமங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த விபத்துகள் மூலம் பொருள் சேதமும், சில நேரங்களில் உயிா்ச்சேதமும் ஏற்பட்டு வருவது வேதனைக்குரியதாகும்.

அனைத்து பகுதிகளிலும் ஆபத்தான பயணம் என அறிந்தும் கிராமப்புற மக்கள் தொடா்ந்து சரக்கு வாகனங்களிலேயே பயணம் செய்கின்றனா். எனவே, கிராமங்களுக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், சரக்கு வாகனப் பயணத்தை முற்றிலும் தடுக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பாகும்.