/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :9 மே 2024, 8:43 pm

Din

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி அலுவலா்கள் சங்கத்தினா்.

ஊழியா்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலா் சந்தோஷ் மீது நடவடிக்கைக் எடுக்கக் கோரி, அரியலூா் மாவட்டத்திலுள்ள 6 ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளையில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரியலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் சேக்தாவூத் தலைமை வகித்தாா். செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலா் பழனிவேல் தலைமை வகித்தாா்.

இதேபோல், திருமானூா், தா.பழூா், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.