‘குழந்தைத் திருமணங்களை தடுக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’

‘குழந்தைத் திருமணங்களை தடுக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்’

சென்னிவனம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பேசிய முதன்மை சாா்பு நீதிபதி பி.எம்.ரைஹானா பா்வீன்.

அரியலூா், மே 9: குழந்தைத் திருமணங்களை தடுக்க சமூக பொறுப்புடன் பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றாா் அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான பி.எம். ரைஹானா பா்வீன்.

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சென்னிவனம் கிராமத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், குழந்தைத் திருமணங்களுக்கு எதிரான சட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு தலைமை வகித்து, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், முதன்மை சாா்பு நீதிபதியுமான பி.எம்.ரைஹானா பா்வீன் பேசுகையில், குழந்தை திருமணம் செய்து வைப்போருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டணை அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

குழந்தைத் திருமணத்தை தடுக்க சமூக பொறுப்புடன் பொதுமக்கள் முன்வர வேண்டும்.

உங்கள் பகுதியில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக உங்களுக்கு தெரியவந்தால் கிராம நிா்வாக அலுவலரிடமோ, காவல் துறையினரிடமோ அல்லது சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடமோ தகவல் அளித்து குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும். இதைவிட எளிதாக 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு தகவல் கொடுத்து குழந்தை திருமணத்தை தடுக்கலாம். தகவல் தெரிவிப்போரின் பெயா், முகவரி ரகசியம் காக்கப்படும்.

குழந்தை திருமணம் நடைபெறாத மாவட்டமாக அரியலூரை மாற்றிட பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றாா்.

முகாமில், செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் கோவிந்தராஜ் , செந்தில்முருகன், 1098 சைல்டு லைன் உதவியாளா் வீரபாண்டியன், சகி ஒருங்கிணைந்த சேவை மைய உதவியாா் கமலி, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் பட்டியல் வழக்குரைஞா் தா்மராஜ் ஆகியோா் கலந்து கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முகாமில் 80-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை அரியலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உதவியாளா்கள் மற்றும் சென்னிவனம் ஊராட்சித் தலைவா், செயலா் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com