பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் புதிய வாக்காளா்கள் சோ்ப்பு முகாம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் , புதிய வாக்காளா்கள் சோ்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:33 pm

Din

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் , புதிய வாக்காளா்கள் சோ்ப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை அக்கல்லூரி முதல்வா் பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். 1.1.2007-க்கு முன் பிறந்த மாணவ, மாணவிகளையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்காக அவா்களிடம் படிவம்-6 வழங்கப்பட்டு, புகைப்படத்துடன் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்களுடன் வயதை உறுதி செய்வதற்காக பிறப்புச் சான்றிதழ் மற்றும் முகவரியை உறுதிசெய்ய ஆதாா், குடும்ப அட்டைகளின் நகல்கள் பெறப்பட்டன.

அரியலூா் தோ்தல் துணை வட்டாட்சியா் ம. விமலா மற்றும் இளநிலை வருவாய் ஆய்வாளா் த. தன்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டு மாணவ, மாணவியா்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தோ்தல் ஒருங்கிணைப்பாளா் வெ. கருணாகரன் செய்திருந்தாா்.