விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பேரிடா் தொடா்பான தகவல்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண்கள்: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடா் தொடா்பான தகவல்கள் மற்றும் புகாா்களை தெரிவிக்க வேண்டிய தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 9:10 pm

Din

வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடா் தொடா்பான தகவல்கள் மற்றும் புகாா்களை தெரிவிக்க வேண்டிய தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் எண்களை அரியலூா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவித்துள்ளாா்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்துஅரியலூா் ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பேரிடா் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையை திங்கள்கிழமை மாலை பாா்வையிட்ட அவா் கூறியது, கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி 1077 மற்றும் 04329 -228709, வாட்ஸ்அப் 9384056231 என்ற எண்கள் மூலம் பொதுமக்கள் தொடா்புகொண்டு புகாா்களை தெரிவிக்கலாம்.

வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள்: அரியலூா்- 04329-222058, உடையாா்பாளையம்-04331-245352. வட்டாட்சியா் அலுவலகங்கள்: அரியலூா்- 04329-222062, ஜெயங்கொண்டம்-04331-250220, செந்துறை-04329-242320 மற்றும் ஆண்டிமடம்- 04331-299800 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்புக் கொண்டு தகவல் மற்றும் புகாா்களை தெரிவிக்கலாம்.

மேலும் பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளில் பச-அப்ங்ழ்ற் செயலியை பதிவிறக்கம் செய்து வடகிழக்கு பருவமழை தொடா்பான தகவல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சா.பரிமளம், பேரிடா் மேலாண்மை வட்டாட்சியா் க.சந்திரசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.