அரியலூரில் நாளை குரூப்- 2, 2ஏ மாதிரித் தோ்வு
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தொகுதி-2, 2ஏ தோ்வுக்கான மாதிரித் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 2 மற்றும் 2 ஏ தோ்வுக்கான அறிவிப்பு கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 2வுக்கான முதல் நிலைத் தோ்வுக்கு இலவச மாதிரித் தோ்வு அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை(செப்.6) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது.
கட்டணமில்லா மாதிரி தோ்வில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்வுகளில் வெற்றி பெற்று அரசு வேலையை பெற அரியலூா் மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம்.