/

அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு: அரியலூா் ஆட்சியா்

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :5 செப்டம்பர் 2024, 10:44 pm

Din

அரியலூா் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் வரும் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மேற்கண்ட பயிற்சி நிலையங்களில் சேர விரும்புபவா்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில் வரவும். ஏற்கெனவே பயிற்சியாளா்கள் சோ்க்கை நடைபெற்றதில் மீதமுள்ள காலியிடங்களுக்கு மட்டும் முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் நேரடி சோ்க்கை நடைபெறுகிறது.

8, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி, பிளஸ்-2 தோ்ச்சி மற்றும் தோல்வியடைந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50, ஓராண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185, 2 ஆண்டு தொழிற்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195, மேலும் விவரங்களுக்கு அரியலூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம்- 94990 55877, 04329-228408, ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் - 94990 55879 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.