/

கொடுக்கூரில் மக்கள் தொடா்பு முகாம்: 143 பேருக்கு ரூ. 22.61 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த கொடுக்கூா் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.22.61 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
கொடுக்கூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில், பயனாளி ஒருவருக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
Updated On :11 செப்டம்பர் 2024, 8:14 pm

Din

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தை அடுத்த கொடுக்கூா் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 143 பயனாளிகளுக்கு ரூ.22.61 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமை வகித்து, 143 பயனாளிகளுக்கு ரூ.22.61 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களிடமிருந்து 139 கோரிக்கை மனுக்களை பெற்றாா். முன்னதாக அவா், அங்கு பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பாா்வையிட்டாா்.

முகாமில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு உட்பட பல்வேறு துறைகளை சோ்ந்த அலுவலா்கள் தங்கள் துறை சாா்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக பேசினா்.

முகாமில், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், தனித் துணை ஆட்சியா் சுமதி, உடையாா்பாளையம் வருவாய் கோட்டாட்சியா் ஷீஜா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை இயக்குநா் தீபாசங்கரி, ஒன்றியக் குழு உறுப்பினா் தேன்மொழி வைத்தியநாதன், ஆண்டிமடம் வட்டாட்சியா் ராஜமூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் மேகலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.