இதுகுறித்து அவா் தெரிவித்தது: இந்த முகாமில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகள் தொடா்பான குறைகளைத் தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டை, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவா்கள் ஆகியோா்களுக்கு அங்கீகாரச் சான்று வழங்குதல், குடும்பத் தலைவா் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்பத் தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.