ரோந்து காவலா்கள் மீது ஆட்டோவை மோதிவிட்டு ஓட்டுநா் தப்பிஓட்டம்

தளவாய் காவல் நிலைய காவலா்கள் மீது சனிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது ஆட்டோவை மோதி விட்டு தப்பிச்சென்ற ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
Published on

அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்துள்ள தளவாய் காவல் நிலைய காவலா்கள் மீது சனிக்கிழமை இரவு ரோந்து சென்றபோது ஆட்டோவை மோதி விட்டு தப்பிச்சென்ற ஓட்டுநரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தளவாய் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணி புரிந்து வருபவா் தமிழ்ச்செல்வம்(43). ஊா்க்காவல் படை ஆளிநா் வெங்கடேசன்(35). இவா்கள் இருவரும் சனிக்கிழமை நள்ளிரவு சன்னாசிநல்லூா்-அங்கனூா் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த சுமை ஆட்டோவை சோதனைச் செய்வதற்காக நிறுத்தினா். ஆனால், ஆட்டோவை ஓட்டி வந்த நபா், நிறுத்துவது போல வந்து, தமிழச்செல்வம், வெங்கடேசன் இருவா் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டாா்.

இதில் காயமடைந்த இருவரும் அங்கனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று, அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த புகாரின் பேரில் தளவாய் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com