ஆதிதிராவிடா், பழங்குடியினா் நிலம் வாங்க மானியத்துடன் கடன் தொகை

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், நிலம் வாங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
Published on

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், நிலம் வாங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா், நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளா்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்க தாட்கோ மூலம் மானியத்துடன் கிரயத் தொகையினை இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மூலமாக குறைந்த வட்டியில் பெறலாம்.

நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி, திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது.

தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக மீதமுள்ள கிரயத் தொகையை தேசிய பட்டியலினத்தோா் நிதி மேம்பாட்டுக் கழக நிதியிலிருந்து 6 சதவீத வட்டியில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் கடனாக பெற்று நிலம் வாங்கலாம்.

எனவே, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின விவசாயிகள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் .

X
Dinamani
www.dinamani.com