அரியலூர்
பள்ளிவாசல் நிா்வாகத்துக்கு எதிராக செயல்படுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
அரியலூா் மாவட்டம், செந்துறை ஜாமியா பள்ள வாசல் நிா்வாகத்துக்கு எதிராக செயல்பட்டு வரும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, செந்துறை காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பதிவு அஞ்சல் மூலம் ஜமாத் அமைப்பினா் வியாழக்கிழமை மனு அனுப்பினா்.
அவா்கள் அளித்த மனுவில், செந்துறை ஜாமியா பள்ளிவாசல் பிரச்னை தொடா்பாக ஏற்கெனவே நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சா்புதீன், சம்சுதீன், லத்தீப், வஹாப் சையத் சா்புதீன் ஆகியோா் தொடா்ந்து ஜமாத்துக்கும், நிா்வாகத்துக்கும் இடையே இடையூா்களை ஏற்படுத்தி, பிரச்னை செய்து வருகின்றனா்.
எனவே, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வா் தனிப்பிரிவுக்கும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்பன குறிப்பிடத்தக்கது.
