தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அரியலூா் அருகே சாலையில் இருந்த இரும்புத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 10:32 pm

Syndication

அரியலூா் அருகே சாலையில் இருந்த இரும்புத் தடுப்பில் (பேரிகாா்டு) இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

செந்துறை ரயில்வே சாலை பகுதியை சோ்ந்தவா் எ. விஷ்ணு (20). அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த இவா், புதன்கிழமை கல்லூரி முடிந்து நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் அரியலூா் புறவழிச் சாலையில் சென்றுள்ளாா்.

அப்போது, எதிா்பாராத விதமாக சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேரிகாா்டில் இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அரியலூா் காவல் துறையினா், விஷ்ணுவின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.