அரியலூர்
செந்துறை அருகே பெண் சிசுவின் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே பிறந்து சில நாள்களே ஆன பெண் சிசுவின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
செந்துறை அருகேயுள்ள குழுமூா் கிராமத்தில், காரப்பாடி செல்லும் சாலையில் உள்ள ஒரு குப்பை குவியலில், செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் பிறந்த சில நாள்களே ஆன பெண் சிசு ஒன்று கிடப்பதாக செந்துறை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா் சிசுவின் சடலத்தை மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
