47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கடைபிடிக்கக் கோரியும் அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
அரியலூா் அண்ணாசிலை அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :18 நவம்பர் 2025, 10:51 pm

Syndication

மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், சமூக நீதி மற்றும் சமத்துவத்தை கடைபிடிக்கக் கோரியும் அரியலூா் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், தலித்துகள், பழங்குடியினா், சிறுபான்மையினா் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் கே. நடராஜன் தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா். மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் டி.தண்டபாணி முன்னிலை வகித்துப் பேசினாா்.

முன்னாள் மாவட்டச் செயலா்கள் இரா. உலகநாதன், ராமநாதன், மாவட்ட பொருளாளா் ஆறுமுகம், அரியலூா் ஒன்றியச் செயலா் து.பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.