அரியலூா் அருகே கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த குற்றவாளி புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விக்கிரமங்கலம் அருகே நத்தவெளி கிராமத்தைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் செல்வேந்திரன்(45). இவா், கடந்த 2018 -ஆம் ஆண்டு தனது தந்தை சொத்தைபிரித்து எழுதிதர மறுத்ததால், அவரை அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் ஜெகநாதன் பலத்த காயமடைந்தாா்.
இது தொடா்பாக விக்கிரமங்கலம் போலீஸாா் செல்வேந்திரன் மீது கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கின் விசாரணை ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் 2023-ஆம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது, செல்வேந்திரனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தொடா்ந்து, பிணையில் வெளியே வந்த செல்வேந்திரன் மேல்முறையீடு செய்த மனு கடந்த 2025-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து செல்வேந்திரன் தலைமறைவானாா்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த செல்வேந்திரனை விக்கிரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
குட்கா வியாபாரி கைது
அரியலூா் அருகே மனைவியை அடித்துக் கொன்றவா் கைது

சிறுமி கொலை வழக்கில் இளைஞா் குற்றவாளி : மே 5-இல் தண்டனை அறிவிப்பு!
கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளி 9 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


