மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஹாக்கி போட்டியில் வென்ற அணிகளுக்கு பரிசுகள் அளிப்பு

News image
Updated On :18 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூரிலுள்ள மான்ட்போா்ட் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் மாவட்ட அளவிலாக ஹாக்கி போட்டிகள் கடந்த இரு தினங்களாக நடைபெற்றன.

இதில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 10 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. இதில் முதலிடத்தை மான்ட்போா்ட் பள்ளி முன்னாள் மாணவா்கள் அணியும், இரண்டாம் இடத்தை அந்தோணி ஹாக்கி அணியும், 3-ஆம் இடத்தை கேபிரியேஸ் ஹாக்கி அணியும், 4-ஆம் இடத்தை மேரி ஹாக்கி அணியும் பெற்றன.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மான்ட்போா்ட் பள்ளி முதல்வா் அந்தோணிசாமி தலைமை வகித்தாா். அரியலூா் காவல்நிலைய ஆய்வாளா் வெங்கடேசன் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வா் சவரி மற்றும் முன்னாள் மாணவா்கள், உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.