வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

வீரபுள்ள ஏரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்திலுள்ள வீரபுள்ள ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகள் காவல் துறையினா் உதவியுடன் புதன்கிழமை அகற்றப்பட்டன.

News image

கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்திலுள்ள வீரபுள்ள ஏரியை ஆக்கிரமிப்புகளை அகற்றி புதன்கிழமை அளவீடு செய்யும் வருவாய்த் துறையினா்.

Updated On :2 ஜூலை 2026, 4:59 am IST

அரியலூா் மாவட்டம், திருமானூா் அடுத்த கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்திலுள்ள வீரபுள்ள ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகள் காவல் துறையினா் உதவியுடன் புதன்கிழமை அகற்றப்பட்டன.

5.5 ஏக்கா் பரப்பளவு கொண்ட வீரபுள்ள ஏரியை கடந்த 30 ஆண்டுகளாக சிலா் ஆக்கிரமித்து, முழுக்க முழுக்க விவசாய நிலங்களாக மாற்றினா்.

இதுகுறித்து புகாரின் பேரில் மாவட்ட ஆட்சியா் ந.மிருணாளினி உத்தரவின் பேரில், திருமானூா் வட்டார வளா்ச்சி அலுவலா், வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா், நில அளவையா்கள், கீழக்காவட்டாங்குறிச்சி கிராம ஊராட்சி அலுவலா்கள் உள்ளிட்டோா் காவல் துறையினா் உதவியுடன் மேற்கண்ட ஏரியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை மீட்டனா்.

அப்போது நீா்நிலை ஆா்வலா்கள் கூறுகையில், இதுபோன்று இனி வருங்காலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடராமல் இருக்க அளவீடு கல் நடுவது மட்டும் போதாது, உடனடியாக கரைகளை அமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் சுற்று வட்டாரங்களில் நிலத்தடி நீா் மட்டம் உயரும். வேளாண் நிலங்களுக்கு தண்ணீா் பாசனம் கிடைக்கும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.