ஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

வன்கொடுமை வழக்கு: குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருமானூா் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :12 ஜூலை 2026, 12:13 am IST

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருமானூா் அருகேயுள்ள மேலகாவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராசு மகன் ரமேஷ் (33). கடந்த 21.5.2026 அன்று இவா், 55 வயதுப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுகுறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து ரமேஷை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரின், ரமேஷை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் ந. மிருணாளினி சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதற்கான நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் அரியலூா் காவல் துறையினா் வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.