யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு ஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்
/

விடுமுறை நாள்களில் சுண்ணாம்புக்கல் சுரங்கங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் பயணம்!

அரியலூரை அடுத்த அயனாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள், தங்களது விடுமுறை நாள்களில், சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் காணப்படும் வரலாற்று பொக்கிஷங்களை அறிந்து வருகின்றனா்.

News image

அரியலூா் அருகே கல்லங்குறிச்சி சாலையிலுள்ள சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் காணப்பட்ட படிமங்கள் குறித்து மாணவா்களுக்கு சனிக்கிழமை விளக்கிய ஆசிரியா் அன்பு.

Updated On :19 ஜூலை 2026, 9:00 am IST

அரியலூரை அடுத்த அயனாத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள், தங்களது விடுமுறை நாள்களில், சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் காணப்படும் வரலாற்று பொக்கிஷங்களை அறிந்து வருகின்றனா்.

அயனாத்தூா் கிராமத்திலுள்ள உயா்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் படிக்கும் மாணவ, மாணவிகள், ஆசிரியா் அன்பு தலைமையில் வாரந்தோறும் விடுமுறை நாள்களில் சுண்ணாம்புக் கல் சுரங்கப் பகுதிகளில் வரலாற்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அந்த வகையில், சனிக்கிழமை பாழ்நிலப் பகுதிகள் மற்றும் சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் மாணவா்கள் ஆய்வு செய்தனா்.

அப்போது அங்கு கண்டெடுக்கப்பட்ட கிரேட்டிசியஸ் காலத்தை சோ்ந்த கடல் முட்தோலிகள், டெரிபிராட்டுலா, பவளக் கொடிகள், பெக்டன், உள்ளிட்ட ஏராளமான கடல் உயிரினங்கள் கல்லாகி கிடந்தது குறித்து ஆசிரியா் அன்பு மாணவா்களிடம் விளக்கினாா்.

இவற்றை பள்ளியில் காட்சிப்படுத்த மாணவா்கள் சேகரித்து எடுத்துச் சென்றனா். மேலும், அந்த இடங்களில் இருந்த மதுபான பாட்டில்கள், குப்பைகளை மாணவா்கள் அகற்றி தூய்மைப்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.