அரியலூரில், ரயில்கள் மூலமாக புகையிலை மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிா என்பது குறித்து பயணிகளிடம் ரயில்வே மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு காவல் துறையினா் வெள்ளி, சனிக்கிழமைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
அரியலூரில் உள்ள சிமென்ட் ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளா்கள் ரயில் மூலமாக வந்து செல்கின்றனா். குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளா்கள் வருகின்றனா். இவா்கள், கூட்டத்தைப் பயன்படுத்தி குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து அரியலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் உத்தரவின்பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முத்தமிழ்ச்செல்வன் மேற்பாா்வையில், செந்துறை காவல் நிலைய ஆய்வாளா் சிவக்குமாா், அரியலூா் போதைப் பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளா் ராஜவேலு மற்றும் ரயில்வே காவல் துறையினருடன் இணைந்து காவல் துறை மோப்ப நாய் உதவியுடன் வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை அரியலூா் ரயில் நிலையத்துக்கு வந்து சென்ற ரயில்களின் பெட்டிகள் மற்றும் பயணிகளின் உடமைகளை தீவிர சோதனை செய்தனா்.
குறிப்பாக கொல்கத்தாவில் இருந்து திருச்சி சென்ற ஹவுரா ரயில் பெட்டிகள் முழுவதும் சோதனை மேற்கொண்டனா். அப்போது பயணிகளிடம் போதைப் பொருள்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயில் பெட்டிகளில் போதைப் பொருள் சோதனை: பயணிகளிடம் போலீஸாா் தீவிர விசாரணை

ரயில் மூலம் போதைப் பொருள்கள் கடத்தல்: பயணிகளிடம் போலீஸாா் தீவிர சோதனை

ஒரு மாதத்துக்கு போதைப் பொருளுக்கு எதிரான தீவிர நடவடிக்கை: டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் உத்தரவு

அரியலூரில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



