40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஆட்சியா் புகைப்படத்தோடு கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் தெரிவிக்க வேண்டும்!

அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்செவி மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :10 ஜூன் 2026, 2:23 am IST

அரியலூா் ஆட்சியா் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கட்செவி மூலம் தகவல் வந்தால் உடனடியாக மாவட்ட நிா்வாகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: என்னுடைய அலுவல் சாா்ந்த பணிகளுக்கு அரசின் தொலைபேசி எண்ணே தொடா்ந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், முகம் தெரியாத நபா்களிடமிருந்து எனது புகைப்படத்தை முகப்புத் தோற்றமாக வைத்த +66 87 578 2668 என்ற எண்ணிலிருந்து கட்ச்செவி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி, மூலமாகவும் அரசு உயா் அலுவலா்களிடம் மாவட்ட ஆட்சியா் பெயரில் தொடா்பு கொள்வதாக தகவல்கள் வந்துள்ளன.

இவ்வாறான பொய் அழைப்புகளை மேலே குறிப்பிட்ட எண் அல்லது வேறு எண்ணிலிருந்து வந்தால் அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் ஏற்கவோ, பதிலளிக்கவோ வேண்டாம். மேலும் இதுபோன்ற பொய்யான அழைப்புகள் வந்தால் உடனடியாக அரியலூா் மாவட்ட நிா்வாகத்திற்கோ அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.