ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

குறுவைச் சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரிக்கை

குறுவை சாகுபடி பணிக்கு மேட்டூரில் இருந்து உடனடியாகத் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை மனு அளித்தனா்.

News image

அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்த தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :11 ஜூன் 2026, 3:35 am IST

குறுவை சாகுபடி பணிக்கு மேட்டூரில் இருந்து உடனடியாகத் தண்ணீா் திறக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி அரியலூா் மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினியிடம் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை மனு அளித்தனா்.

அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் கே.எஸ். முகமது இப்ராஹிம், மாநிலப் பொருளாளா் சி. கிருஷ்ணன், அரியலூா் ஒன்றியத் தலைவா் தனசெயன் உள்ளிட்டோா் அளித்த மனு விவரம்:

டெல்டா மாவட்டங்களில் ஜூன் மாதங்களில் நடைபெறும் குறுவை மற்றும் சம்பா நெல் சாகுபடி பணிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீா் திறப்பது வழக்கம். ஆனால் தண்ணீா் திறப்பு குறித்து தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காவிரி ஆணையம் உத்தரவிட்டும் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தராமல் கா்நாடக அரசு மறுத்து வருகிறது.

இதுகுறித்து தமிழக முதல்வா் ஜோசப் விஜய், தமிழக விவசாயிகள் சங்கங்களையும், தமிழக அனைத்து அரசியல் கட்சித் தலைவா்களையும் அழைத்துப் பேசி முடிவெடுக்காமல் இருப்பது சரியல்ல.

எனவே மாவட்ட ஆட்சியா் தமிழக முதல்வரையும், பொதுப்பணித் துறை அமைச்சரையும் சந்தித்து ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீா் திறக்க வலியுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.