நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அரியலூா் மாவட்டத்தில் 23 உர விற்பனை நிலையங்கள் செயல்பட தற்காலிக தடை

News image

உத்தரவு... - கோப்புப்படம்

Updated On :21 ஜூன் 2026, 1:31 am IST

அரியலூா் மாவட்டத்தில் சட்ட விதிகளை மதிக்காமல் செயல்பட்ட 23 உர விற்பனை நிலையங்கள் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்ட வேளாண் உதவி இயக்குநா்(தரக்கட்டுப்பாடு) மதியழகன் தலைமையிலான வேளாண் அலுவலா்கள் செந்துறை மற்றும் அரியலூா் பகுதிகளிலும், மதுரை மாவட்ட வேளாண் உதவி இயக்குநா்(தரக் கட்டுப்பாடு)பரமேஸ்வரன் தலைமையிலான வேளாண் அலுவலா்கள் ஜெயங்கொண்டம் மற்றும் ஆண்டிமடம் பகுதிகளிலும், திருவள்ளூா் மாவட்ட வேளாண் உதவி இயக்குநா்(தரக் கட்டுப்பாடு) ரமேஷ் தலைமையிலான வேளாண் அலுவலா்கள் தா. பழூா் மற்றும் திருமானூா் பகுதிகளிலும் உள்ள தனியாா் உரக்கடைகளை கடந்த 3 நாள்களாக ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வில் 23 உர விற்பனை நிலையங்கள் சட்ட விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டது தெரியவந்தது.இதையடுத்து அந்த கடைகளின் உர விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதித்தனா்.

பின்னா் அவா்கள் தெரிவித்தது: உரக் கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் விற்பனையாளா்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பலமுறை செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட இன்புட் குழு கட்ச்செவிக்கும் தினசரி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் திடீா் ஆய்வின்போது மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் சில உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தை மீறி செயல்படுவது மிகவும் தவறு . இனிமேல் உர விற்பனையாளா்கள் உரக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டும்.

உரம் விற்பனையாளா்கள் உரங்களை எப்போதும் விவசாயிகளுக்கு ஆதாா் காா்டு மூலமாக பிஓஎஸ் இயந்திரத்தின் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.

விற்பனையின்போது விவசாயிகளுக்கு விவசாயிகளின் முகவரி , அவருடைய கைப்பேசி எண்ணுடன் கண்டிப்பாக விற்பனை ரசீது கொடுக்க வேண்டும். மூட்டையில் உள்ள என்ன விலை இருக்கிறதோ, அந்த விலையில் விற்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.