அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரியலூா் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வளாகம் முழுவதும் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

News image
அரியலூரிலுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.
Updated On :10 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வளாகம் முழுவதும் காவல் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அரியலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அதிகாரபூா்வ மின்னஞ்சலுக்கு, செவ்வாய்க்கிழமை காலை 9.31 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் 5 சைனைட் விஷவாயு நிரப்பப்பட்ட குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவை பிற்பகல் 1 மணிக்கு வெடிக்கும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரியின் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸாா் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். அதில், எவ்வித வெடிபொருள்களும் இல்லை என்றும், அது வெறும் மிரட்டல் தகவல் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.