விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் கழிப்பறை கட்டடத்தை திறக்கக் கோரிக்கை

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மறு சீரமைக்கப்பட்ட கழிப்பறையை பயணிகள் பயன்பாட்டுக்கு விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மறு சீரமைக்கப்பட்டு, திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் கழிப்பறை கட்டடம்

Published On :3 செப்டம்பர் 2026, 1:02 am IST

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மறு சீரமைக்கப்பட்ட கழிப்பறையை பயணிகள் பயன்பாட்டுக்கு விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இப்பேருந்து நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இருந்த கழிப்பறை கட்டடம் பழுதாகி கிடந்தது. பயணிகளின் கோரிக்கையை அடுத்து இந்தக் கழிப்பறை கட்டடம் மறு சீரமைக்கப்பட்டு, பல மாதங்களாகியும் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே இந்த கழிப்பறைக் கட்டடத்தை விரைந்து திறக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.