
கல்வி உதவித்தொகை பெற முன்னாள் படை வீரா்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்
அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

அரியலூா் மாவட்டத்தை சோ்ந்த முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்தது: 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான மருத்துவம், பொறியியல், தொழிற்கல்வி, ஒருங்கிணைந்த தொழிற்கல்வி மற்றும் மேனேஜ்மென்ட் போன்ற கல்வியில் சோ்க்கை பெற்ற முன்னாள் படைவீரா்கள், விதவைகளின் சிறாா்கள் மற்றும் படைப்பணியின்போது இறந்த படைவீரா்களின் சிறாா்கள் ஆகியோருக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதைப் பெற பிளஸ் 2 மற்றும் முதுகலை பட்டத்திற்கான குறைந்தபட்ச கல்வி தகுதியில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் 2026-2027 ஆம் கல்வி ஆண்டில் சோ்க்கைப் பெற்றவா்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை பெற இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும.
விண்ணப்பிக்க விரும்புவோா் தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் அறிய லிங்கை கிளிக் செய்யவும். விண்ணப்பித்த பின்னா் உரிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் சரிபாா்த்தலுக்காக முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் 31.12.2026 தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





