பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஜெயங்கொண்டத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வருவாய் வட்டாட்சியரகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியரகம் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

Published On :

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வருவாய் வட்டாட்சியரகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மகிமைப்புரம் பகுதியில், ஆங்கிலேயா் ஆட்சியில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்புக்கு ஒத்திகைக்கு விடப்பட்ட நிலத்தில், 99 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்தவா்களுக்கே பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒப்பந்த காலம் முடிந்துள்ள விவசாய நிலத்தில், பயிரிடப்பட்டுள்ள முந்திரி, சவுக்கு, தைலம் போன்ற மரங்களை வெட்டக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் ஆா். மணிவேல் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் எஸ். துரைராஜ் கண்டன உரையாற்றினாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் எம். வெங்கடாஜலம், மாவட்டத் தலைவா் டி. தியாகராஜன், மாவட்டத் துணைச் செயலா் பி. பத்மாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.