பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கரூர் பொன் வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

கரூர் பொன் வித்யா மந்திர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
 இரண்டு நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை பள்ளி நிறுவனர் பெரியசாமி தொடக்கிவைத்தார். மாணவ, மாணவிகள் அறிவியல் தொடர்பான கண்டுபிடிப்புகளை கண்காட்சிக்கு வைத்திருந்தனர். கண், புற்றுநோய், சுற்றுச்சூழல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் மாதிரிகளும் இடம் பெற்றிருந்தன.
 நிழல், கிரகணம் ஆகியவை குறித்து மாணவ, மாணவிகள் பொம்மலாட்ட கலைநிகழ்ச்சி மூலம் விளக்கம் அளித்தனர். தானியங்கி காசாளும் இயந்திரம் செயல்படும் விதம், விண்கல மாதிரி உள்ளிட்டவைகளும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஏற்பாடுகளை, பள்ளியின் தலைமைச் செயலர் சத்தியநாராயணன், செயலர் விசாகன், முதல்வர் பாபு உள்ளிட்டோர் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com