மார்க்சீய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகளைத் தடுக்க வலியுறுத்தி, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் கொடுமைகளைத் தடுக்க வலியுறுத்தி, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கரூரில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் நகரச் செயலர் எம்.ஜோதிபாசு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், புதுதில்லியில் பாலியல் வன்கொடுமையால் மாணவி உயிரிழந்ததற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும்.
 தமிழகத்தில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
 ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் ஜி. ரத்தினவேலு, மாவட்டச் செயலர் கே. கந்தசாமி, செயற்குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், சண்முகசுந்தரம், இலக்குவன், சக்திவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com