டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திடீர் தீ: மரங்கள், கேபிள் வயர்கள் சேதம்

குளித்தலை - மணப்பாறை சாலையோரம் முளைத்திருந்த நாணல் புற்களில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள், கேபிள் வயர்கள் சேதமடைந்தன.

Updated On :13 மே 2013, 1:40 am IST

குளித்தலை - மணப்பாறை சாலையோரம் முளைத்திருந்த நாணல் புற்களில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள், கேபிள் வயர்கள் சேதமடைந்தன.

கரூர் மாவட்டம், குளித்தலை - மணப்பாறை மாநில நெடுஞ்சாலையில், குளித்தலையிலிருந்து கோட்டமேடு செல்லும் வழியில் சாலையோர வயல் பகுதியில் நாணல் புற்கள் அதிகளவில் முளைத்திருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடிரென காய்ந்த நிலையில் இருந்தபுற்களில் தீப்பிடித்தது. விரைவாக பரவிய தீயால் சில பனை, வாழைகள், கேபிள் வயர்கள் கருகின. இதையடுத்து உடனடியாக இப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

இதனிடையே இப்பகுதி பொதுமக்கள் அருகிலிருந்த தண்ணீர் மோட்டாரைப் பயன்படுத்தி தீயணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீயை முழுமையாக அணைக்க முடியவில்லை.  தகவலறிந்து வந்த முசிறி தீயணைப்புத் துறை வீரர்கள் ஒரு மணிநேர போராட்டத்துக்குப் பின் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.