வெண்ணைமலை சேரன் பள்ளி சார்பில் 835 நூல்கள் நன்கொடை
இலங்கை யாழ்ப்பாணம், மலேசிய நூலகங்களுக்கு கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சார்பில் 835 தமிழ் நூல்கள் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
உலகின் மூத்த மொழியான தமிழின் தொன்மையும், சிறப்பும் யாவரும் அறிந்தது. இலக்கியச் செல்வத்தை பெரும்பகுதியாக உள்ளடக்கிய தமிழ் மொழி ஈராயிரம் ஆண்டுகளுக்கு
மேலாக பெருமை குன்றாமல் திகழ்கிறது.
தமிழ் நூல்களை கடல் கடந்து வாழும் தமிழர்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என அண்மையில் தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இலங்கை யாழ்பாணம் மற்றும் மலேசிய நாட்டின் நூலகத்துக்கு கரூர் வெண்ணைமலை சேரன் மெட்ரிக். பள்ளி சார்பில் 835 நூல்கள் நன்கொடையாக மாவட்ட கல்வித்துறையிடம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவில் பள்ளியின் தாளாளர் கே.பாண்டியன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பெ.அய்யண்ணனிடம் நூல்களை நன்கொடையாக வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வி.பழனியப்பன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
