அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது

குளித்தலையில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக 3 பேரைக் கைது செய்த போலீஸார் மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

Updated On :26 ஜூன் 2018, 8:20 am IST

குளித்தலையில் அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்ததாக 3 பேரைக் கைது செய்த போலீஸார் மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து மணப்பாறை நோக்கி அரசு நகரப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. பேருந்து மணப்பாறை சாலையில் உள்ள குளித்தலை ரயில்வே கேட் அருகே சென்றபோது குளித்தலை கோட்டைமேடு பகுதியைச்  சேர்ந்த அஜீத் (23) என்பவர் பேருந்தை நிறுத்தியுள்ளார்.  
அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை சிறிதுதூரம் தள்ளிச்சென்று நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அஜித், அவரது நண்பர்களும்,  அதே பகுதியைச் சேர்ந்த சசிக்குமார்(22), ராஜசேகர்(19), ஆனந்த் (22) ஆகியோர் சேர்ந்து பேருந்தின் பின்பக்கக் கண்ணாடியை உடைத்ததாகக் கூறப்படுகிறது. புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் வழக்கு பதிந்து அஜித், சசிக்குமார், ஆனந்த் ஆகியோரைக் கைது செய்தனர். ராஜசேகரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.