கிடப்பில் போடப்பட்ட தாதம்பாளையம் ஏரி தூர் வாரும் திட்டம் துரிதப்படுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் ஆனைமலை என்ற இடத்தில் உற்பத்தியாகும் அமராவதி ஆற்றின் குறுக்கே கரூர் மாவட்டம் அணைப்பாளையம் என்ற இடத்தில் தடுப்பணை, பள்ளபாளையம் ராஜவாய்க்கால் மற்றும் தாதம்பாளையத்தில் ஏரி ஆகியவை அப்போதைய ஆங்கிலேய அரசால் 1881-ல் அமைக்கப்பட்டது.
இதன்மூலம் கரூர் மாவட்டத்தின் குடிநீர் தேவை, விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. நாளடைவில் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து நின்றுபோனதால் வாய்க்கால், தாதம்பாளையம் ஏரி ஆகியவை தூர்ந்து போனது. வரத்து வாய்க்கால்களும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி காணாமல் போனது. எனவே நீண்ட நாள் கோரிக்கையான கால்வாய் மற்றும் தாதம்பாளையம் ஏரியைத் தூர் வாரி தண்ணீர் நிரப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதுதொடர்பாக விவசாயி புளியம்பட்டி ராமசாமி மற்றும் அமராவதி நதி நீர் பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் லிங்கம் சின்னசாமி ஆகியோர் கூறியது:
முதலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாதம்பாளையம் ஏரியை பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
பல ஆண்டுகளாக ஏரி தூர் வாரப்படாததால் முட்கள் நிறைந்து வனமாக தற்போது காட்சியளிக்கிறது. எங்களது கோரிக்கையின் பேரில், மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை கடந்த 2013 இல் அதிகாரிகளோடு வந்து ஏரியைப் பார்வையிட்டார்.
அதன் பின்னர் நடவடிக்கை ஏதும் இல்லை. தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், ஏரியை தூர்வாரும் பணியை மேற்கொள்வதோடு அணைப்பாளையம் தடுப்பணையில் இருந்து நீர் வரும் வரத்து வாரிகளை சீரமைத்து ஏரியில் நீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் காமெடி, ஹாரர் திரைப்படம்!
பெத்தியில் நடனமாட ஸ்ருதி ஹாசனுக்கு ரூ. 3 கோடி சம்பளம்?

மே 5-ல் இந்தியா வருகிறார் வியத்நாம் அதிபர்!

டேவிட் வார்னர் - ஷிகர் தவான் சாதனையை சமன் செய்த டிராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இணை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

