நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கரூரில் ஆடுகளை திருட முயன்ற இருவர் கைது

கரூரில் ஆடுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:39 am IST

கரூரில் ஆடுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் பசுபதீஸ்வரர் கோயில் அருகே செந்தில்குமார் (36) வளர்த்து வரும்  ஆடுகள் அடிக்கடி காணாமல் போயின. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் மேய்ந்துகொண்டிருந்த இவரது ஆடுகளை  ஆம்னி காரில் வந்த இருவர் கடத்த முயன்றனர்.  
இதைக் கண்ட அப்பகுதியினர் உடனே சுற்றிவளைத்து ஆடுகளை கடத்த முயன்ற கரூர் மூலக்காட்டனூரைச் சேர்ந்த கண்ணன் (32), பசுபதிபாளையம் வடக்குத்தெருவைச் சேர்ந்த சுப்ரமணி(35) ஆகியோரை பிடித்து கரூர் நகர காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து, காரையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.