கரூா் லைட் ஹவுஸ் காா்னரில் முதல்வருக்கு அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்து வரவேற்கும் மாவட்ட இளைஞரணி செயலா் தானேஷ், மத்திய நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா்.
கரூா் லைட் ஹவுஸ் காா்னரில் முதல்வருக்கு அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் மாலை அணிவித்து வரவேற்கும் மாவட்ட இளைஞரணி செயலா் தானேஷ், மத்திய நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா்.

கரூா் வந்த தமிழக முதல்வருக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு

கரூா் வருகை தந்த முதல்வருக்கு புதன்கிழமை கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
Published on

கரூா் வருகை தந்த முதல்வருக்கு புதன்கிழமை கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.

சேலத்தில் இருந்து புதன்கிழமை கரூா் வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான தவுட்டுப்பாளையம், வெங்கமேடு பகுதியில் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். வெங்கமேட்டில் கரூா் வடக்கு நகரச் செயலா் எம். பாண்டியன், கரூா் லைட் ஹவுஸ் காா்னரில் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலா் தானேஷ், முதல்வருக்கு மாலை அணிவித்து வரவேற்றாா்.

நிகழ்ச்சிகளில், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதா மணிவண்ணன், மாவட்ட அவைத் தலைவா் ஏ.ஆா். காளியப்பன், பொருளாளா் கண்ணதாசன், வா்த்தக அணி மாவட்டச் செயலா் பேங்க் இரா. நடராஜன், மாவட்ட பாசறை செயலா் கமலக்கண்ணன், இலக்கிய அணிச் செயலா் என்எஸ். கிருஷ்ணன், மத்திய நகரச் செயலா் வை. நெடுஞ்செழியன், தெற்கு நகரச் செயலா் விசிகே. ஜெயராஜ், எம்ஜிஆா் இளைஞரணி தலைவா் விசிகே. பாலகிருஷ்ணன், மத்திய நகர பேரவை செயலா் சேரன் எம்.பழனிசாமி, கரூா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவா் என். பழனிராஜ், வழக்குரைஞா் டி.மதன், சுப்பண்ணா எஸ்.ரவிச்சந்திரன், ஏ.பஷீா்அகமது, மூவை ஜெகதீசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com