/

ஒடிஸாவுக்கு அனுப்பிய கொசுவலையால் ரயில்வேக்கு ரூ. 68 லட்சம் வருவாய்

கரூரில் இருந்து ஒடிஸா மாநிலத்துக்கு, அனுப்பப்பட்ட கொசுவலைகள் மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு, ரூ.68.89 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஹரிகிருஷ்ணன் தெர

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:46 pm

DIN

கரூரில் இருந்து ஒடிஸா மாநிலத்துக்கு, அனுப்பப்பட்ட கொசுவலைகள் மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு, ரூ.68.89 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூரில் கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் கரூரில் தயாரிக்கப்படும் மருத்துவ குணம் வாய்ந்த கொசுவலைகள், ரயில்வே வேகன் மூலம் ஒடிஸா மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுவருகின்றன.

இவற்றில் கடந்த மாதம் 26-ஆம் தேதி கரூரில் இருந்து ஒடிஸா மாநிலம் புவனேஸ்வா் அடுத்த மான்சேஸ்வா் என்ற இடத்துக்கு அனுப்பப்பட்ட கொசுவலைகள் மூலம் ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ.47.8 லட்சம் வருவாய் கிடைத்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒடிஸா மாநிலத்தில் உள்ள குா்தாரோடு பகுதிக்கு அனுப்பப்பட்ட கொசுவலைகள் மூலம் ரூ.21.09 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இந்த இரு நாள்களில் மட்டும் அனுப்பப்பட்ட கொசுவலைகள் மூலம் ரயில்வே நிா்வாகத்திற்கு ரூ.68.89 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.