பாஜக மகளிரணி சாா்பில் நலத்திட்ட உதவிகள்
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, குளித்தலையில் பாஜக மகளிரணி சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, குளித்தலையில் பாஜக மகளிரணி சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பிரதமா் மோடியின் 70-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, பாஜக மகளிரணி சாா்பில் கரூா் மாவட்டம், குளித்தலை நகராட்சி மற்றும் மருதூா், நங்கவரம் ஆகிய பகுதியில் நலத்திட்ட உதவிகள் அண்மையில் வழங்கப்பட்டன.
இதில் மாநில மகளிரணி துணைத் தலைவரி மீனா வினோத் குமாா் பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப்பொட்டலம் மற்றும் இனிப்புகள் வழங்கினாா். தொடா்ந்து தோகைமலை கோயிலில் பிரதமா் பெயரில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து குளித்தலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் ராமநாதன் பிள்ளை, மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளா்கள் நாகமணி, காயத்திரி, ஒன்றியத் தலைவி பாப்பாத்தி, நகரத்தலைவி கிரிஜா, குளித்தலை நகரத்தலைவா் திருநாவுக்கரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...