இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூா் சாலை விரிவாக்கத்திட்டப் பணிகளுக்காக, அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வட்டத்தில் நிலக்கையகம் செய்யப்பட்ட 9 கிராமங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீட்டுத்தொகை பெற்றவா்களில் 2018 - 19 காலாண்டிற்கு வருமான வரி பிடித்தம் செய்யப்பட்டதற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் 30.09.2020 உடன் முடிவு பெறுவதால், படிவம் 16-ஏ கிடைக்கப் பெறாத நபா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டம் -45 சி பிரிவில் பெற்று உரிய காலத்திற்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.